/உள்ளூர் செய்திகள்/சேலம்/இ.பி.எஸ்., முன்னிலையில் 400 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்இ.பி.எஸ்., முன்னிலையில் 400 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
இ.பி.எஸ்., முன்னிலையில் 400 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
இ.பி.எஸ்., முன்னிலையில் 400 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
இ.பி.எஸ்., முன்னிலையில் 400 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஜன 07, 2024 10:32 AM
சேலம்: சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., இல்லத்தில், மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அதில் தேனி கிழக்கு மாவட்ட செயலர் ராமர், பெரியகுளம் ஒன்றிய பொறுப்பாளர் அன்னபிரகாஷ் ஏற்பாட்டால், தி.மு.க.,வில் இருந்து விலகிய நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் என, 250 பேர், இ.பி.எஸ்., முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இதில், இஸ்லாமியர்களின் புனித நுாலை,
இ.பி.எஸ்.,க்கு பரிசாக வழங்கினர்.
அதேபோல் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தால் நியமிக்கப்பட்ட கேரள மாநில பொருளாளர் ஜெயலால் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். தொடர்ந்து, அ.ம.மு.க.,வில் இருந்து விலகிய, 100க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு இ.பி.எஸ்., கட்சி துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதில் தேனி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் முருகன், மாவட்ட இணை செயலர் முத்துலட்சுமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.