/உள்ளூர் செய்திகள்/சேலம்/கோவிலில் சிலை திருட்டு 100 அடி துாரத்தில் மீட்புகோவிலில் சிலை திருட்டு 100 அடி துாரத்தில் மீட்பு
கோவிலில் சிலை திருட்டு 100 அடி துாரத்தில் மீட்பு
கோவிலில் சிலை திருட்டு 100 அடி துாரத்தில் மீட்பு
கோவிலில் சிலை திருட்டு 100 அடி துாரத்தில் மீட்பு
ADDED : ஜன 10, 2024 09:27 PM
சேலம்:சேலம், சின்ன திருப்பதி கூட்டுறவு சங்கம் அருகே, அடுத்தடுத்து உள்ள விஜய் விநாயகர், ஸ்வர்ண லிங்கேஸ்வரர் கோவில்களின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையறிந்து அங்கு கோவில் நிர்வாகத்தினர் வந்து பார்த்தபோது, விநாயகர் கோவில் உண்டியல், சிவன் கோவிலில், 2.5 அடி உயரத்தில், 18 கிலோவில், ஐம்பொன்னால் ஆன சிவன் உற்சவர் சிலை திருடுபோனது தெரிந்தது. அதன் மதிப்பு, 50,000 ரூபாய். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கோவிலில் இருந்த, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்ததில் காலை, 2:30 மணிக்கு கடப்பாறையுடன் கோவிலுக்கு வந்தவர், பூட்டை உடைத்து உள்ளே சென்றதும், உண்டியலை உடைத்து பணம், கருவறையில் இருந்த உற்சவர் சிலையை திருடிச்சென்றதும் பதிவாகியிருந்தது.
ஆனால் சிறிது நேரத்தில் சிலையின்றி நடந்து சென்றது, போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின் கோவில் சுற்றுப்புற பகுதியில் தேடியபோது, 100 அடி துாரத்தில், உற்சவர் சிலை கிடப்பதை பார்த்து கண்டெடுத்தனர்.
ஆனால் திருடிச்சென்ற உண்டியலை காணவில்லை. இதுதொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், கைவரிசை காட்டிய நபரை தேடி வருகின்றனர்.