/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் மாவட்டத்தில் கனமழை; சாலைகளில் வெள்ளப்பெருக்குசேலம் மாவட்டத்தில் கனமழை; சாலைகளில் வெள்ளப்பெருக்கு
சேலம் மாவட்டத்தில் கனமழை; சாலைகளில் வெள்ளப்பெருக்கு
சேலம் மாவட்டத்தில் கனமழை; சாலைகளில் வெள்ளப்பெருக்கு
சேலம் மாவட்டத்தில் கனமழை; சாலைகளில் வெள்ளப்பெருக்கு
ADDED : ஜூன் 19, 2024 06:28 AM
சேலம் : சேலத்தில் நேற்று பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.சேலத்தில் நேற்று மாலை, 5:30 மணிக்கு திடீரென மழை பெய்ய தொடங்கியது.
சிறிது நேரத்தில் கனமழையாக மாறி, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்தது. அஸ்தம்பட்டி, சாரதா கல்லுாரி சாலை, கிச்சிபாளையம் பிரதான சாலை, நாராயண நகர், சங்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில், மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.வேலைக்கு சென்று வீடு திரும்புவோர் நேற்று கடும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குட்டையாக தேங்கி நின்றது. சூரமங்கலம் பகுதியில், மாடியின் மீது அமைக்கப்பட்டிருந்த மொபைல்போன் டவர் அருகில் இருந்த கடை மீது சாய்ந்தது. திடீர் கனமழையால், சேலத்தில் நேற்று குளு குளு சூழல் நிலவியது.* நேற்று காலை முதல் வாழப்பாடி சுற்று வட்டார பகுதியில் வெயில் சுட்டெரித்தது. இரவு 7:00 முதல், 8:00 மணி வரை ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.* இடைப்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. நகரின் பல பகுதிகளில் மழைநீர், சாக்கடை கழிவுநீருடன் கலந்து சாலைகளில் ஓடியதால், இருசக்கர வாகன ஓட்டிகள், பைக்குகளை ஓட்ட முடியாமல் அவதிக்குள்ளாகினர். மேலும், 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டதால் மக்கள் அவதிப்பட்டனர்.மழை பெய்து ஓய்ந்த பிறகு, இடைப்பாடியில் வானவில் தோன்றியது. இதை ஏராளமான மக்கள் கண்டு பரவசமடைந்தனர்.* தாரமங்கலம் நகராட்சி, 11, 13, 19 வார்டு குடியிருப்பில் இருந்து வரும் சாக்கடை கழிவுகள், சங்ககிரி சாலையில் உள்ள சாக்கடை வழியாக செல்கிறது. தினசரி மார்க்கெட் பகுதியில் சாக்கடை துார்வாராததால், நேற்று மதியம் பெய்த மழையால், சாக்கடை கழிவுகளுடன் மழைநீர் சாலையில் சென்றது. இதனால் அந்த வழியாக சென்ற பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். அதேபோல், மார்க்கெட்டில் சாலையோர கடைகளுக்குள் கழிவுகளுடன் மழைநீர் சென்றதால், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.