ADDED : ஜூன் 10, 2025 01:05 AM
சேலம், வழிப்பறி வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று பேர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த பிரபாகரன், 45, என்பவரிடம் கடந்த மே, 12ல் கத்தியை காட்டி மிரட்டி, 6,000 ரூபாயை பறித்த கிச்சிபாளையத்தை சேர்ந்த குமார் மகன்கள் பிரேம்குமார், 23, சாரதி, 21, நாராயண நகர் கலைச்செல்வன் மகன் அசோக், 20, ஆகியோரை கிச்சிபாளையம் போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்களால் பொதுமக்கள் அவதிப்படுவதோடு, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதால், போலீஸ் துணை கமிஷனர் வேல்முருகன் உத்தரவிட்டதை தொடர்ந்து, கமிஷனர் பிரவின்குமார் அபினபு, மூன்று பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, அதற்கான நகல், சேலம் சிறையில் உள்ள பிரேம்குமார், சாரதி மற்றும் அசோக்கிடம் வழங்கப்பட்டது.