/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கிழக்கு தபால் ஆபீசில் 26ல் குறைதீர் கூட்டம் கிழக்கு தபால் ஆபீசில் 26ல் குறைதீர் கூட்டம்
கிழக்கு தபால் ஆபீசில் 26ல் குறைதீர் கூட்டம்
கிழக்கு தபால் ஆபீசில் 26ல் குறைதீர் கூட்டம்
கிழக்கு தபால் ஆபீசில் 26ல் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூன் 11, 2025 02:38 AM
சேலம், சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அறிக்கை:
தபால்துறை சேவைகளின் குறைபாடு குறித்து, வரும், 26 மதியம், 12:00 மணிக்கு, சேலம் தலைமை அஞ்சலக கட்டடம், 3ம் தளத்தில் நடக்க உள்ள குறைதீர் கூட்டத்தில் புகார் செய்து பயன்பெறலாம்.
குறிப்பாக மணியார்டர், வி.பி.பி., வி.பி.எல்., பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தொடர்பான புகார்களுக்கு, அனுப்புனர், பெறுநர், முழு முகவரி, பதிவு அஞ்சல் எண், கிளை அலுவலக பெயர் உள்ளிட்ட தகவல்களுடன், சேமிப்பு வங்கி மற்றும் காப்பீடு தொடர்பான புகார்களுக்கு கணக்கு எண், பாலிசி எண், வாடிக்கையாளர் பெயர் மற்றும் பணம் வசூலித்த விபரங்களுடன் வரும், 18க்குள் 'முதுநிலை கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு கோட்டம்' என்ற முகவரியில் தபால் மூலமாகவும், கூட்டத்தில் நேரடியாக கொடுத்து பயன் பெறலாம்.