ADDED : மே 10, 2025 01:37 AM
தாரமங்கலம்,தாரமங்கலம் நகராட்சியில் காமராஜர் நகர், எம்.ஜி.ஆர்., காலனி உள்பட, 17 அங்கன்வாடியில் படித்த, 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, தண்டிகேஸ்வரன்பாளையம் மையத்தில் நேற்று நடந்தது. மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கினர்.
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் யசோதா, பணியாளர்கள் பங்கேற்றனர்.