Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ராமேஸ்வரம் - காசி இடையே இலவச ஆன்மிக பயணம்

ராமேஸ்வரம் - காசி இடையே இலவச ஆன்மிக பயணம்

ராமேஸ்வரம் - காசி இடையே இலவச ஆன்மிக பயணம்

ராமேஸ்வரம் - காசி இடையே இலவச ஆன்மிக பயணம்

ADDED : அக் 19, 2025 03:02 AM


Google News
சேலம்: ராமேஸ்வரம் - காசி இடையே ஆன்மிக பயணமாக, 600 பக்-தர்கள் இலவசமாக அழைத்துச்செல்லப்பட உள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறையின், 20 மண்டலங்களில் இருந்து, தலா, 30 பக்தர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு இலவச-மாக ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்பட உள்ளனர். இதற்-கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டலங்களில் உள்ள, அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகங்களில் நேரில் பெறலாம். www.hrnc.tn.gov.in என்ற இணைய தளத்திலும் பதிவி-றக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அதற்கு இந்து சமயத்தை சார்ந்தவராகவும், 60 முதல், 70 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ள தகுதியானவர்கள், அதற்கான சான்றிதழை தாசில்தாரிடம் பெற்று, போதிய உடல் தகுதி சான்றிதழை, அரசு அறுவை சிகிச்சை மருத்துவரிடம் பெற்று, ஆதார் கார்டு நகலுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வரும், 22க்குள் சம்பந்தப்பட்ட மண்டல இணை கமிஷனர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். விபரம் பெற, 1800 425 1757 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, சேலம் உதவி கமிஷனர்

ராஜா தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us