/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மருத்துவமனை ஊழியர்களுக்கு தீ தடுப்பு செயல்முறை விளக்கம் மருத்துவமனை ஊழியர்களுக்கு தீ தடுப்பு செயல்முறை விளக்கம்
மருத்துவமனை ஊழியர்களுக்கு தீ தடுப்பு செயல்முறை விளக்கம்
மருத்துவமனை ஊழியர்களுக்கு தீ தடுப்பு செயல்முறை விளக்கம்
மருத்துவமனை ஊழியர்களுக்கு தீ தடுப்பு செயல்முறை விளக்கம்
ADDED : செப் 10, 2025 02:13 AM
சேலம், சேலம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில், திருவாக்கவுண்டனுார் பைபாஸில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீ தடுப்பு செயல் முறை விளக்கம் நேற்று நடந்தது. துறை அலுவலர் மகாலிங்க மூர்த்தி தலைமை வகித்தார். அதில் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகளை எவ்வாறு மீட்பது, ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு முதலுதவி அளிப்பது, காயம் அடைந்தவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து, மருத்துவமனை ஊழியர்களுக்கு, செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தீ பரவினால் அணைப்பது குறித்தும், செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
ஓமலுார் தீயணைப்பு நிலையம் சார்பில், நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையில் வீரர்கள், காமலாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு, தீ விபத்து, பேரிடர் காலத்தில் எவ்வாறு பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என செயல் விளக்கம் அளித்தனர்.
அதேபோல் ஆத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் வீரர்கள், தீ விபத்து குறித்து செயல் முறை விளக்கம் அளித்தனர். கெங்கவல்லி தீயணைப்பு துறை சார்பிலும், தனியார் மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.