மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை
மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை
மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை
ADDED : செப் 11, 2025 01:08 AM
சேலம், :சேலம் அரசு மருத்துவமனையில், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சிவக்குமார் தலைமையில் வீரர்கள், நேற்று தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை செய்து காட்டினர்.
குறிப்பாக மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகளை எப்படி மீட்பது, மின்சாரம் மற்றும் மருத்துவ கருவிகள் சேதம் அடையாமல் தீயில் இருந்து காப்பாற்றுவது; முறையாக தீயணைப்பு கருவிகளை கையாள்வது; புகையால் மயக்கம் அடைந்தவர்களுக்கு முதலுதவி அளிப்பது; தீ பரவாமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகளை, தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர். ஆர்.எம்.ஓ., ஸ்ரீலதா, மருத்துவர்கள், செவிலியர்கள், தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் மேட்டூரில் உள்ள சேலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு, நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள், தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செவிலியர்களுக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பயிற்சி அளித்தனர்.
கெங்கவல்லி அருகே கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு குறித்து செயல்விளக்க முகாம் நடந்தது. வாழப்பாடி அடுத்த பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும், வாழப்பாடி தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து குறித்து போலி ஒத்திகை பயிற்சி, தீ தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.