/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சிறுமிக்கு பாலியல் தொந்தரவு நிதி நிறுவன ஓனருக்கு 'ஆயுள்' சிறுமிக்கு பாலியல் தொந்தரவு நிதி நிறுவன ஓனருக்கு 'ஆயுள்'
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு நிதி நிறுவன ஓனருக்கு 'ஆயுள்'
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு நிதி நிறுவன ஓனருக்கு 'ஆயுள்'
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு நிதி நிறுவன ஓனருக்கு 'ஆயுள்'
ADDED : ஜூன் 26, 2025 02:02 AM
சேலம், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிதி நிறுவன உரிமையாளருக்கு, ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம், கிச்சிப்பாளையம், ராஜாபிள்ளை காட்டை சேர்ந்தவர் சிவகுமார், 44. தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர், நண்பர் அசோக்குமாருடன் சேர்ந்து, 17 வயது சிறுமியை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகார்படி, அம்மாபேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர். இதையடுத்து அச்சம் அடைந்த அசோக்குமார், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகுமாரை, போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் சிவகுமாருக்கு ஆயுள் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி நேற்று உத்தரவிட்டார்.