Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சுற்றுலா பயணியர் குறைவு; களை இழந்தது ஏற்காடு

சுற்றுலா பயணியர் குறைவு; களை இழந்தது ஏற்காடு

சுற்றுலா பயணியர் குறைவு; களை இழந்தது ஏற்காடு

சுற்றுலா பயணியர் குறைவு; களை இழந்தது ஏற்காடு

ADDED : ஜூன் 24, 2024 07:27 AM


Google News
ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு கோடை விடுமுறையில் ஏராளமான சுற்றுலா பயணியர் வருவர். தொடர்ந்து சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியர் குவிவதால் ஏற்காடு களைகட்டும். கடந்த திங்களில் பக்ரீத் பண்டிகையால், 3 நாட்கள் தொடர் விடுமுறை. அதனால் சனி முதலே, ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர். அவர்கள் அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டத்தை பார்த்து ரசித்தனர். பலர், அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அதேபோல் நேற்று முன்தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்தனர்.

ஆனால் நேற்று, சுற்றுலா பயணியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது. ஆங்காங்கே சிலரே தென்பட்டனர். இதனால் கடந்த வாரம் பரபரப்பாக காணப்பட்ட இடங்கள், நேற்று களை இழந்து காணப்பட்டது. அதேபோல் படகு சவாரிக்கு வந்தவர்களும் காத்திருக்காமல், உடனுக்குடன் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

ரூ.19,390 வசூல்

மேட்டூர் அணை பூங்கா நுழைவு கட்டணம், 5ல் இருந்து, 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் மொபைல் போன் எடுத்துச்செல்ல, 10 ரூபாய் கட்டமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணை பூங்காவை நேற்று, 5,183 பேர் சுற்றிப்பார்த்தனர். இதன்மூலம், 51,830 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அதேபோல் மொபைல் கொண்டு சென்ற, 1,939 பேரிடம், 19,390 ரூபாய் வசூலிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us