ADDED : ஜூன் 25, 2025 01:52 AM
மேட்டூர், மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார் அறிக்கை:
மேட்டூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், வரும், 27 காலை, 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. மேட்டூர், ஓமலுார் வருவாய் வட்ட விவசாயிகள், கோரிக்கைகளை தெரிவிக்கலாம். வேளாண், தோட்டக்கலை, உள்ளாட்சி, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்க வேண்டும். அவர்கள், கடந்த மாதம் விவசாயிகளிடம் பெற்ற மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கை விபரத்தை, அறிக்கையாக வழங்க வேண்டும்.