ADDED : ஜூலை 10, 2024 07:27 AM
பெத்தநாயக்கன்பாளையம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், கீழ்நாடு ஊராட்சி சடையம்பட்டி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் கணேசன், 38.
விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு மரவள்ளி தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் தேடிச்சென்றனர். அப்போது காட்டெருமை தாக்கி இறந்து கிடந்தது தெரிந்தது. கரியகோவில் போலீசார், விவசாயி உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.