/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பெண் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி பெண் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி
பெண் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி
பெண் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி
பெண் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி
ADDED : செப் 11, 2025 01:42 AM
கெங்கவல்லி, :கெங்கவல்லி வேளாண் துறையின், 'அட்மா' திட்டத்தில், கணேசபுரத்தில், சிறந்த வேளாண் தொழில்நுட்ப நடைமுறைகள், பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
அதில், துணை வேளாண் அலுவலர் ரவி, மக்காச்சோள விதை ரகங்கள் தேர்வு செய்யும் முறைகள், கோடை உழவு, அடி உரம் இடுவதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் அற்புதவேலன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சங்கர், பிரபா ஆகியோர், மண் மாதிரிகள் எடுக்கும் முறைகள், மண் வளத்துக்கு ஏற்ற பயிர் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். 25 பெண் விவசாயிகள் பங்கேற்றனர்.