/உள்ளூர் செய்திகள்/சேலம்/இ.பி.எஸ்.,சை சந்தித்த முன்னாள் அமைச்சர்இ.பி.எஸ்.,சை சந்தித்த முன்னாள் அமைச்சர்
இ.பி.எஸ்.,சை சந்தித்த முன்னாள் அமைச்சர்
இ.பி.எஸ்.,சை சந்தித்த முன்னாள் அமைச்சர்
இ.பி.எஸ்.,சை சந்தித்த முன்னாள் அமைச்சர்
ADDED : ஆக 03, 2024 07:00 AM
சேலம்: அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று சேலம் வந்தார்.
தொடர்ந்து நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில், மாநகர், மாவட்ட செயலர் வெங்கடாஜலம் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அப்போது, எம்.எல்.ஏ., மணி, முன்னாள் எம்.பி., பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், பொருளாளர் வெங்கடாசலம், மாநில வக்கீல் பிரிவு துணை செயலர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்நிலையில் பழனிசாமியை, முன்னாள் அமைச்சர் அன்பழகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சில வாரங்களுக்கு முன், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,சை கட்சியில் சேர்க்க வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர்கள், 6 பேர் பழனிசாமியை சந்தித்து முறையிட்டனர். அந்த, 6 பேரில் அன்பழகனும் ஒருவர். அவர், இ.பி.எஸ்.,சை சந்தித்து ஆலோசித்தது, கட்சியினர் இடையே பரபரப்பாக பேசப்பட்டது.