/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நாளை பெ.நா.பாளையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நாளை பெ.நா.பாளையத்தில் வேலைவாய்ப்பு முகாம்
நாளை பெ.நா.பாளையத்தில் வேலைவாய்ப்பு முகாம்
நாளை பெ.நா.பாளையத்தில் வேலைவாய்ப்பு முகாம்
நாளை பெ.நா.பாளையத்தில் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : அக் 24, 2025 01:38 AM
சேலம், பெத்தநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்க உள்ளது.
இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
ஊரக வாழ்வாதார இயக்கத்தில், 18 முதல், 45 வயது வரையுள்ளவர்களுக்கு, தனியார் நிறுவனங்கள் மூலம், வட்டார அளவில் வேலைவாய்ப்பு முகாம், பெத்தநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், அக்., 25ல்(நாளை) நடக்க உள்ளது. அதில், 8ம் வகுப்பு முதல், பட்ட மேற்படிப்பு வரை படித்த இளைஞர்கள், மகளிர் பங்கேற்கலாம். பிரபல தனியார் நிறுவனத்தினர், ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். விபரங்களுக்கு, 0427 - 2411552, 94861 59320 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


