/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மூதாட்டியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு மூதாட்டியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு
மூதாட்டியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு
மூதாட்டியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு
மூதாட்டியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு
ADDED : மே 22, 2025 01:29 AM
ஓமலுார் காடையாம்பட்டி, திப்பிரெட்டியூரை சேர்ந்தவர் பாப்பாயி, 75. நேற்று முன்தினம் மாலை, வீடு முன் அமர்ந்திருந்துள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத ஒருவர், மூதாட்டியை தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த, 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார்.
பாப்பாயி புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.