/உள்ளூர் செய்திகள்/சேலம்/கத்தரிக்காய் விலை கிலோ ரூ.90 ஆக உயர்வுகத்தரிக்காய் விலை கிலோ ரூ.90 ஆக உயர்வு
கத்தரிக்காய் விலை கிலோ ரூ.90 ஆக உயர்வு
கத்தரிக்காய் விலை கிலோ ரூ.90 ஆக உயர்வு
கத்தரிக்காய் விலை கிலோ ரூ.90 ஆக உயர்வு
ADDED : ஜூலை 10, 2024 07:12 AM
ஆத்துார்: ஆத்துார், தலைவாசல், வீரகனுார், கெங்கவல்லி, தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி உள்ளிட்ட காய்கறி சாகுபடி செய்யப்படுகின்றன.
கடந்த வாரம் கிலோ 30 ரூபாய்க்கு விற்ற கத்தரிக்காய், நேற்று, 90 ரூபாய்க்கு விற்பனையானது. இதுகுறித்து ஆத்துார் காய்கறி மொத்த வியாபாரி சீனிவாசன் கூறுகையில், ''தலைவாசல் மார்க்கெட்டுக்கு கத்தரிக்காய் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் ஒரு மூட்டை(30 கிலோ), 600 முதல், 700 ரூபாய் வரை விற்ற நிலையில், இரு நாட்களாக மூட்டை 1,800 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இதற்கேற்ப மார்க்கெட், உழவர் சந்தைகளில் கிலோ 70 முதல், 80 ரூபாய், வெளிமார்க்கெட்டில், 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது,'' என்றார்.