/உள்ளூர் செய்திகள்/சேலம்/தி.மு.க., வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கல்தி.மு.க., வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கல்
தி.மு.க., வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கல்
தி.மு.க., வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கல்
தி.மு.க., வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கல்
ADDED : ஜூன் 05, 2024 04:43 AM
சேலம், : சேலம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை, கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. 26 சுற்றுகளாக நடந்த ஓட்டு எண்ணிக்கை முடிவில் தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி வெற்றி பெற்றார். அவர், அ.தி.மு.க., வேட்பாளர் விக்னேஷை விட, 70,357 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ம.க., வேட்பாளர் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனோஜ்குமார், 'டிபாசிட்' இழந்தனர்.
தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதிக்கு, வெற்றி சான்றிதழை, மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி வழங்கினார்.
இதையடுத்து செல்வகணபதி கூறுகையில், ''24 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லோக்சபாவுக்கு தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி. முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, சேலம் தொகுதி மக்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும். எனக்கு ஓட்டுப்போட்ட மக்கள், வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி,'' என்றார். எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.