/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அம்பலவாணர் கோவில் திருப்பணி நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் தவிப்பு அம்பலவாணர் கோவில் திருப்பணி நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் தவிப்பு
அம்பலவாணர் கோவில் திருப்பணி நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் தவிப்பு
அம்பலவாணர் கோவில் திருப்பணி நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் தவிப்பு
அம்பலவாணர் கோவில் திருப்பணி நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் தவிப்பு
ADDED : அக் 19, 2025 03:01 AM
சேலம்: சேலம், குகை அம்பலவாணர் சுவாமி கோவில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அங்கு கும்பாபி ேஷகம் நடத்த, 2023 மார்ச், 23ல் பாலாலயம் நடந்தது. கும்பாபிேஷக நிதி, 8 லட்சம் ரூபாயில் மூலவர் கருவறை கோபுரம், நடராஜர், சிவகாமி சன்னதி கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டி, கோவிலின் ஒருபுற தரைப்பகுதி மட்டும் புனரமைக்கப்பட்டது.
மீதி தரைப்பகுதி சிதிலமாக உள்ளது. போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல், திருப்பணி நிறுத்தப்பட்டு, ஒன்றரை ஆண்டாகியும் நடவடிக்கை இல்லை. இதனால் சப்த கன்னிகள், பஞ்ச லிங்கம், ஆஞ்சநேயர், பாலசுப்ர
மணி, விநாயகர், நவ
கிரகம் உள்பட, 20க்கும் மேற்பட்ட பரிவார சன்னதிகள் மூடப்-பட்டு, பக்தர்கள் வழிபட முடியாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், 'திருப்பணியில் மெத்தனம் காட்டுவதால் கும்பாபிேஷகம் எப்போது நடக்கும் என்பது கேள்-விக்குறியாக உள்ளது. திருப்பணிக்கு உதவ, உபயதாரர்கள் தயா-ராக இருந்தும், அவர்களை பயன்படுத்திக்கொள்ள கோவில் அதி-காரிகள் முன்வரவில்லை. அதனால் திருப்பணி மீண்டும் தொடங்-கப்படாமல் உள்ளது. இனியும் காலம் கடத்தாமல் திருப்பணியை விரைந்து முடித்து, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும்' என்-றனர்.
செயல் அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், ''தீபாவளி முடிந்-ததும், திருப்பணி வேலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்-படும்,'' என்றார்.


