/உள்ளூர் செய்திகள்/சேலம்/புதிய பணிக்கொடை திட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்புதிய பணிக்கொடை திட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
புதிய பணிக்கொடை திட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
புதிய பணிக்கொடை திட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
புதிய பணிக்கொடை திட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2024 01:59 AM
வீரபாண்டி: புதிய பணிக்கொடை திட்டத்தை ரத்து செய்யக்கோரி, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, 'செயில்' நிறுவனத்தின் இரும்பு உருக்காலை சேலத்தில் செயல்படுகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
புதிய பணிக்கொடை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சேலம் இரும்பாலை முதலாவது நுழைவு வாயில் முன், நேற்று சி.ஐ.டி.யு, தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய, 39 மாத அரியர்ஸ் தொகையை உடனே வழங்க வேண்டும். வீட்டு வாடகை படியை உயர்த்தி வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள குறைகளை உரிய முறையில் விரைந்து தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு., துணை தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.