/உள்ளூர் செய்திகள்/சேலம்/வெளிப்படையாக ஏலம் நடத்த கோரி ஆர்ப்பாட்டம்வெளிப்படையாக ஏலம் நடத்த கோரி ஆர்ப்பாட்டம்
வெளிப்படையாக ஏலம் நடத்த கோரி ஆர்ப்பாட்டம்
வெளிப்படையாக ஏலம் நடத்த கோரி ஆர்ப்பாட்டம்
வெளிப்படையாக ஏலம் நடத்த கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 09, 2024 06:21 AM
மேச்சேரி : மேச்சேரி டவுன் பஞ்.,க்கு சொந்தமான கடைகள், சைக்கிள் ஸ்டாண்டை வெளிப்படையாக ஏலம் விடக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேச்சேரி சிறப்பு நிலை டவுன்பஞ்., செயல் அலுவலராக இருந்த கோபால், கடை மற்றும் சைக்கிள் ஸ்டாண்ட் ஏலத்தில் குளறுபடி ஏற்படுத்தியதால் கடந்த, 3ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று மேச்சேரி டவுன் பஞ்., அலுவலகம் முன், ஒன்றிய குழு உறுப்பினர் மாது தலைமையில், மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது மேச்சேரி டவுன் பஞ்.,க்கு சொந்தமாக ஏராளமான கடைகள், வாரச்சந்தை, சைக்கிள் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்ட் கடைகள் உள்ளன. அவற்றை பகிரங்கமாக ஏலம் விட்டு, 17 ஆண்டுகள் ஆகிறது. குறிப்பாக, 1,000 ரூபாய்க்கு வாடகைக்கு விட வேண்டிய கடைகள், 100 ரூபாய்க்கு விடப்படுகிறது. அதனை நடத்துபவர்கள் உள்வாடகைக்கு, 3,000 ரூபாய் வரை வாடகை வசூலிக்கின்றனர்.
இதன் மூலம் டவுன் பஞ்.,க்கு கிடைக்க வேண்டிய வருவாய் தனி நபர்களுக்கு செல்கிறது. இதனால், மேச்சேரி டவுன் பஞ்., மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் பாதிக்கிறது. வரும் ஆண்டுகளில் ஒளிவு, மறைவு இன்றி ஏலத்தை வெளிப்படையாக விட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி செயல் அலுவலர் (பொ) ரேணுகாவிடம் மனு கொடுத்தனர்.
விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் தங்கவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் பழனி, ஒன்றிய முன்னாள் செயலாளர் ரத்தினவேல் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.