Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலத்தில் நேற்று முதல் மூன்று நாட்கள் 'அத்தி வரதர்' தரிசனம்; பக்தர்கள் பரவசம்

சேலத்தில் நேற்று முதல் மூன்று நாட்கள் 'அத்தி வரதர்' தரிசனம்; பக்தர்கள் பரவசம்

சேலத்தில் நேற்று முதல் மூன்று நாட்கள் 'அத்தி வரதர்' தரிசனம்; பக்தர்கள் பரவசம்

சேலத்தில் நேற்று முதல் மூன்று நாட்கள் 'அத்தி வரதர்' தரிசனம்; பக்தர்கள் பரவசம்

ADDED : ஜூலை 02, 2024 05:21 AM


Google News
சேலம்: அத்தி மரத்தால் செய்யப்பட்ட, 'அத்திவரதரை' ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆனந்தசரஸ் குளத்தில் இருந்து, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 'அத்தி வரதர்' வெளியில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடந்த 2019 ஜூலை 1 முதல், 48 நாட்கள் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். இதையொட்டி, சேலம் பட்டைக்கோவில் அருகே கனகராஜகணபதி தெருவில் உள்ள, ராமர் பஜனை மடத்தில் நேற்று முதல் நாளை (ஜூலை 3) வரை மூன்று நாட்களுக்கு, 'அத்தி வரதர்' பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க உள்ளார்.

முதல் நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் செய்து, அத்தி மரத்தால் செய்யப்பட்ட 'அத்தி வரதர்' சிலையை அர்ச்சாவதாரத்தில் எழுந்தருள செய்தனர். இவரை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபட்டு செல்கின்றனர். இன்று சவுராஷ்டிரா சமூக பாகவதர்கள் சார்பில், பக்தி பஜனை, இன்னிசை, நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.

இன்றும், நாளையும் காலை, 5:00 முதல் இரவு, 10:00 மணி வரை 'அத்தி

வரத'ரை பக்தர்கள் தரிசித்து வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us