/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற தம்பதிக்கு 'காப்பு' வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற தம்பதிக்கு 'காப்பு'
வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற தம்பதிக்கு 'காப்பு'
வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற தம்பதிக்கு 'காப்பு'
வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற தம்பதிக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 17, 2025 01:08 AM
தலைவாசல், தலைவாசல் அருகே, வீரகனுார் டவுன் பஞ்சாயத்து, வீ.ராமநாதபுரம் பகுதியில், வீட்டினுள் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யும் வீடியோ நேற்று முன்தினம் வைரலானது. அந்த வீட்டினுள், பார் போன்று காலி மதுபாட்டில்கள் குவியலாக இருந்ததும் வீடியோவில் இருந்தது.
சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்யும்படி, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் உத்தரவிட்டார். வீரகனுார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வீட்டினுள் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்ற, வீ.ராமநாதபுரத்தை சேர்ந்த செல்வம், 55, அவரது மனைவி சுகந்தி, 52, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம், 23 மதுபாட்டில்களை பறிமுதல்
செய்தனர்.