ADDED : செப் 13, 2025 01:21 AM
சேலம், சேலம், பொன்னம்மாபேட்டை தெற்கு ரயில்வே லைன் பகுதியில், நேற்று அம்மாபேட்டை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது அதே பகுதியை ராஜசேகரன், 45, அவரது மனைவி திலகா, 45, ஆகியோர் வீட்டில், சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.