/உள்ளூர் செய்திகள்/சேலம்/அண்ணாமலையை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்அண்ணாமலையை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அண்ணாமலையை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அண்ணாமலையை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அண்ணாமலையை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 12, 2024 07:22 AM
சேலம்: தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து அவதுாறு பேசியதாக, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில், காங்., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.அதில் அண்ணாமலையை கண்டித்து கோஷம் எழுப்பியதோடு, அவரது படத்தை கிழித்து வீசினர். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தடுத்ததால், சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொருளாளர் ராஜகணபதி, வர்த்தக பிரிவு தலைவர் சுப்ரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.
சாலை மறியல்அதேபோல் ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் சேலம் கிழக்கு மாவட்ட காங்., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமை வகித்தார். அதில் அண்ணாமலை உருவ படத்தின் மீது பெண்கள், காலணியால் அடித்து கண்டன கோஷம் எழுப்பினர். அந்த படங்களை தீ வைக்க முயன்றதால், போலீசார் பிடுங்கிச்சென்றனர். பின் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்யக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அர்த்தனாரி உள்பட, 37 பேரை, ஆத்துார் டவுன் போலீசார் கைது செய்தனர்.