/உள்ளூர் செய்திகள்/சேலம்/தலைவர் வீட்டில் கம்ப்யூட்டர் தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணாதலைவர் வீட்டில் கம்ப்யூட்டர் தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா
தலைவர் வீட்டில் கம்ப்யூட்டர் தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா
தலைவர் வீட்டில் கம்ப்யூட்டர் தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா
தலைவர் வீட்டில் கம்ப்யூட்டர் தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா
ADDED : ஜன 03, 2024 10:32 PM
ஓமலுார்:சேலம் மாவட்டம் ஓமலுார் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அ.தி.மு.க.,வை சேர்ந்த, தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தி.மு.க., கவுன்சிலர்களான கோபால்சாமி, சிவஞானவேல், குப்புசாமி, துரைசாமி உட்பட 9 பேர், '2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் தலைவருக்கு வாங்கிய கம்ப்யூட்டர், ஒன்றிய அலுவலகத்தில் இல்லை. அவர், சொந்த பயன்பாட்டுக்கு வீட்டுக்கு எடுத்து சென்று விட்டார்' என்றனர்.
மேலும், 'பில் இருக்கு; கம்ப்யூட்டர் எங்கே' எனும் வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்களை கையில் வைத்து, கூட்ட அரங்கில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது ராஜேந்திரன், ''சில பணிகளுக்காக ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. சற்று நேரத்தில் அலுவலகத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார். இதையடுத்து, தங்கள் கோரிக்கை நிறைவேறியதால், தி.மு.க., கவுன்சிலர்கள் அமைதியாகினர்.