/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஜல்லிக்கட்டு நடத்த விரும்புவோர் விண்ணப்பிக்க கலெக்டர் அறிவுரைஜல்லிக்கட்டு நடத்த விரும்புவோர் விண்ணப்பிக்க கலெக்டர் அறிவுரை
ஜல்லிக்கட்டு நடத்த விரும்புவோர் விண்ணப்பிக்க கலெக்டர் அறிவுரை
ஜல்லிக்கட்டு நடத்த விரும்புவோர் விண்ணப்பிக்க கலெக்டர் அறிவுரை
ஜல்லிக்கட்டு நடத்த விரும்புவோர் விண்ணப்பிக்க கலெக்டர் அறிவுரை
ADDED : ஜன 13, 2024 04:04 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில் கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்து பேசியதாவது:மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்புவோர், ஒரு மாதத்துக்கு முன், www.jallikattu.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக ஜல்லிக்கட்டில் பங்கேற்க செய்யும் காளை, 2 வயதுக்கு மேற்பட்டதாக, 120 செ.மீ., உயரத்துக்கு மேல் இருக்க வேண்டும். மாடுபிடி வீரர்கள், 18 வயதுக்கு மேற்பட்டு நல்ல உடல்நிலை கொண்டவராகவும், நிகழ்ச்சிக்கு முன், இணையதளத்தில் பெயர் பதிவும் செய்ய வேண்டும்.ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வரும்போது காளையை பாதுகாப்பாக, விதிமுறைக்கு உட்பட்டு வர வேண்டும். ஊக்கமருந்து தருதல், கண்ணில் மிளகாய் பொடி துாவுதல், கூரிய கருவிகளால் துன்புறுத்தல் போன்ற செயலில் ஈடுபடுதல் கூடாது. காளையின் கொம்பில் ரப்பர் காப்புகளை அணிவிக்க வேண்டும். மாடுபிடி வீரர்கள், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்வதோடு ஊக்க மருந்து, போதைப்பொருட்களை உட்கொண்டு போட்டியில் பங்கேற்கிறார்களா என குழு கண்காணிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும்போது போலீஸ், வருவாய், கால்நடை, மருத்துவம், பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.