/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரூ.880 கோடியில் ஜவுளி பூங்கா சேலத்தில் அடிக்கல் நாட்டினார் முதல்வர் ரூ.880 கோடியில் ஜவுளி பூங்கா சேலத்தில் அடிக்கல் நாட்டினார் முதல்வர்
ரூ.880 கோடியில் ஜவுளி பூங்கா சேலத்தில் அடிக்கல் நாட்டினார் முதல்வர்
ரூ.880 கோடியில் ஜவுளி பூங்கா சேலத்தில் அடிக்கல் நாட்டினார் முதல்வர்
ரூ.880 கோடியில் ஜவுளி பூங்கா சேலத்தில் அடிக்கல் நாட்டினார் முதல்வர்
ADDED : ஜூன் 13, 2025 01:45 AM
சேலம், சேலத்தில் நேற்று நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய திட்டப்பணிகள் விபரம்:ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை சார்பில், சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அங்கன்வாடி மையங்கள், சமுதாய சுகாதார வளாகங்கள், பள்ளிகளில் கழிப்பறைகள், பேவர் பிளாக் மற்றும் கான்கிரீட் நடைபாதைகள், சாலைகள், கால்வாய், வடிகால் பணிகள், சிறு பாலங்கள், தகனக்கூடங்கள் உள்பட, 442 பணிகள், 35.48 கோடியில் மேற்கொள்ளப்படும்.
வேளாண் பொறியியல் துறை சார்பில், சேலம் வேளாண் பொறியியல் துறை வளாகத்தில், 30 லட்சம் ரூபாயில் வேளாண் இயந்திரம் பழுது நீக்கும் மையம்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் சேலத்தில், 8.25 கோடி ரூபாயில் ஆதிதிராவிடர் கல்லுாரி மாணவியர் விடுதி; கரியகோவில் வளவில், 20.76 கோடி ரூபாயில் பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி, மாணவ, மாணவியர் விடுதிகள்; தேக்கம்பட்டு, குன்னுார், பகுடுப்பட்டு, புதுார், சூலாங்குறிச்சி, ஓடைக்காட்டுபுதுார், கருமந்துறை ஆகிய இடங்களில் உள்ள பழங்குடியின நல துவக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 3.78 கோடி ரூபாயில் கழிப்பறைகள் என, 20 பணிகள், 34.50 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.
பள்ளி கல்வித்துறை சார்பில் சேலத்தில், 100 கோடி ரூபாயில் புது நுாலக கட்டடம்; பதிவுத்துறை சார்பில் மேட்டூரில், 2.66 கோடி ரூபாயில் சார்பதிவாளர் அலுவலகம்; நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேலம் சந்தை மற்றும் சேலம் நகர ரயில்வே ஸ்டேஷன் இடையே, 78.65 கோடி ரூபாயில் சாலை மேம்பாலம், கைத்தறி மற்றும் துணிநுால் துறை சார்பில் சேலத்தில், 880 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, கொண்டலாம்பட்டியில், 32 லட்சம் ரூபாய் மதிப்பில் சந்தை விரிவாக்கம்; பொதுப்பணித்துறை சார்பில் ஏற்காட்டில் பொதுப்பணித்துறைக்கு, 5 கோடி ரூபாயில் ஆய்வு மாளிகை; சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில், ஆத்துாரில், 60 லட்சம் ரூபாயில், 'சகி' பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் என, 1,244.27 கோடி ரூபாய் மதிப்பில், 509 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.
இந்த விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளர் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலர்களான, அயோத்தியாப்பட்டணம் தெற்கு விஜயகுமார், வடக்கு ரத்தினவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் கோபால், அயோத்தியாப்பட்டணம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பாபு, துணைத்தலைவர் செல்வ சூரியா, அவரது கணவர் சேதுபதி, சேலம் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாலு, ஏத்தாப்பூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் அன்பழகன், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் கார்த்திகேயன்(வடக்கு), ராஜ்குமார்(தெற்கு), சேலம் கிழக்கு மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் பாலு, துணை அமைப்பாளர் குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின், மேட்டூரிலிருந்து சேலம் வரும் வழியில், பெரியார் பல்கலை நுழைவாயிலில், அதன் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த, ஈ.வெ.ரா., படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். பல்கலை நிர்வாக குழு உறுப்பினர் சுப்ரமணி, ஜெயந்தி உடனிருந்தனர்.
மாலை, 5:00 மணிக்கு சேலம் விமான நிலையம் வந்த முதல்வர், சென்னை செல்லும் பயணியர் விமானத்தில் புறப்பட்டார். அவரை, அமைச்சர்கள் வேலு, ராஜேந்திரன், பன்னீர்செல்வம், ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, வழியனுப்பி வைத்தனர்.