/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 'குடி'மகன் கைது அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 'குடி'மகன் கைது
அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 'குடி'மகன் கைது
அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 'குடி'மகன் கைது
அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 'குடி'மகன் கைது
ADDED : அக் 22, 2025 01:31 AM
சேலம், சேலம், புது பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:45 மணிக்கு, சிதம்பரம் செல்லும் தீபாவளி சிறப்பு பஸ்சின் பின்புற கண்ணாடி மீது ஒருவர் கல் வீசினார்.
கண்ணாடி உடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் தைலாகவுண்டன், 47, கண்டக்டர் உதவியுடன், அந்த வாலிபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அம்மாபாளையம், வீரபாண்டியார் நகரை சேர்ந்த சரவணன், 20, 'போதை'யில் கல் வீசியதும் தெரிந்தது. அவரை, போலீசார், நேற்று கைது செய்தனர்.


