ADDED : செப் 01, 2025 04:08 AM
சேலம்: சேலம் ரயில்வே ஸ்டேஷன் நுழைவாயிலில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் அருகே, மின்மாற்றி பகுதியில், 3 வயது ஆண் குழந்தை, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, மூச்சு, பேச்சின்றி கிடந்தது.
மக்கள் தகவல்படி, சூரமங்கலம் போலீசார், குழந்தையை கைப்-பற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் அங்-குள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்-றனர்.