Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கொளத்துார் உப கோட்டத்தில் மின் பகிர்மான எண்கள் மாற்றம்

கொளத்துார் உப கோட்டத்தில் மின் பகிர்மான எண்கள் மாற்றம்

கொளத்துார் உப கோட்டத்தில் மின் பகிர்மான எண்கள் மாற்றம்

கொளத்துார் உப கோட்டத்தில் மின் பகிர்மான எண்கள் மாற்றம்

ADDED : செப் 10, 2025 02:19 AM


Google News
சேலம், மின்வாரிய மேட்டூர் செயற்பொறியாளர் சரவணகுமார்(பொ) அறிக்கை:

கொளத்துார் உப கோட்டத்தில் புதிதாக சத்யா நகர் பிரிவு அலுவலகம் அமைக்கும் பணி நடந்து வருவதால், மின் பகிர்மான எண்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கொளத்துார் தெற்கு பிரிவு, புறநகர் என மாற்றப்பட்டுள்ளது. அதன் பகிர்மான எண்களான, பூமனுார் 105 - 009, செட்டியூர், 105 - 010, கண்ணாமூச்சி, 105 - 001, பாலமலை, 105-012, பெரியகுளம் 105 - 008 என மாற்றப்பட்டுள்ளது.

புறநகர் பிரிவு, வடக்கு கொளத்துாராக மாற்றப்பட்டு, தார்க்காடு 104 - 019, அய்யம்புதுார், 105 - 007 என மாற்றப்பட்டுள்ளது. அதே புறநகர் பிரிவு, சத்யா நகராக மாற்றப்பட்டு, சின்னதண்டா, 100 - 005, பெரியதண்டா, 100 - 006 என மாற்றப்பட்டுள்ளது.

கொளத்துார் வடக்கு பிரிவு, சத்யா நகராக மாற்றப்பட்டு, ஏமனுார், 100 - 001, காவேரிபுரம், 100 -002, கணவாய்காடு, 100 - 003, தெலுங்கனுார், 100 - 004, சத்யா நகர், 100 - 007, கோவிந்தபாடி, 100 - 008, செட்டிப்பட்டி, 100 - 009, கோரப்பள்ளம், 100 - 010 என, புதிய எண்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எந்த பிரிவு அலுவலகத்தில் உள்ளது, இணைப்பு எண், பெயர் ஆகியவற்றை சரிபார்த்து மின் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us