Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வாலிபரின் சேதமடைந்த சிறுநீரகத்தை செயல்பட செய்த காவேரி மருத்துவமனை

வாலிபரின் சேதமடைந்த சிறுநீரகத்தை செயல்பட செய்த காவேரி மருத்துவமனை

வாலிபரின் சேதமடைந்த சிறுநீரகத்தை செயல்பட செய்த காவேரி மருத்துவமனை

வாலிபரின் சேதமடைந்த சிறுநீரகத்தை செயல்பட செய்த காவேரி மருத்துவமனை

ADDED : ஜூன் 07, 2025 01:13 AM


Google News
சேலம், சாலை விபத்தில் சிக்கிய, 24 வயது வாலிபரின் இடது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, உள் ரத்தப்போக்கு, சிறுநீர் கசிவு ஏற்பட்டது. அவரை, காவேரி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் காப்பாற்றினர்.

விபத்தில் சிக்கிய வாலிபரின் இடது சிறுநீரகத்தின் ரத்தப்போக்கை நிறுத்த, மருத்துவமனை அவசர எம்போலைசேஷன் என்ற சிகிச்சையையும், சிறுநீர் கசிவை தடுக்க சிறுநீர் குழாய் ஸ்டென்ட்டை பொருத்தும் சிகிச்சையையும் காவேரி மருத்துவமனை வழங்கியது.

டாக்டர்கள் அபிராமி, ரமேஷ் எத்திராஜன், சந்தோஷ்குமார் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். டாக்டர். அபிராமி

கூறியதாவது:

விபத்தில் அடிபட்ட வாலிபர், ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு இடது சிறுநீரகம் மற்றும் மண்ணீரலில் காயங்கள் இருந்தன. இடது சிறுநீரகத்தில் தீவிர ரத்தப்போக்கு, சிறுநீர் கசிவு இருந்தன.

தற்செயலாக, அவரது வலது சிறுநீரகம் சுருங்கிய நிலையில் இருந்ததும் கண்டறியப்பட்டது. இடது சிறுநீரகத்தின் காயம், 5ம் நிலை என மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி

இருந்தது.

அவரது வலது சிறுநீரகம் செயலிழந்த நிலையில்

இருந்ததால், வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் தேவையை தவிர்க்க, இடது சிறுநீரகத்தை காப்பாற்ற வேண்டும். அதிர்ஷ்டவசமாக, இதற்காக நாங்கள் அளித்த சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறின. அவரது மண்ணீரலும் சரியானது. பல நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிறகு, சீரான நிலையில் வாலிபர் டிஸ்சார்ஜ் செய்யப்

பட்டார்.

இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us