/உள்ளூர் செய்திகள்/சேலம்/உச்சநீதிமன்றத்தில் வழக்கு; வக்கீல் சங்கம் முடிவுஉச்சநீதிமன்றத்தில் வழக்கு; வக்கீல் சங்கம் முடிவு
உச்சநீதிமன்றத்தில் வழக்கு; வக்கீல் சங்கம் முடிவு
உச்சநீதிமன்றத்தில் வழக்கு; வக்கீல் சங்கம் முடிவு
உச்சநீதிமன்றத்தில் வழக்கு; வக்கீல் சங்கம் முடிவு
ADDED : ஜூலை 12, 2024 07:22 AM
சேலம்: சேலம் வக்கீல்கள் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார்.அதில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள, 3 குற்றவியல் சட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. அதற்கு தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்பமணி, வக்கீல்கள் சந்திரசேகர், பொன்முடி உள்பட, 8 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.மேலும் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழுவிடம், இச்சட்டங்களில் உள்ள குறைகளை பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது. செயலர் நரேஷ்பாபு, பொருளாளர் அசோக்குமார், ஏராளமான வக்கீல்கள் பங்கேற்றனர்.