/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு பெண் மீது வழக்குப்பதிவு ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு பெண் மீது வழக்குப்பதிவு
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு பெண் மீது வழக்குப்பதிவு
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு பெண் மீது வழக்குப்பதிவு
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு பெண் மீது வழக்குப்பதிவு
ADDED : ஜூலை 05, 2025 01:14 AM
மேட்டூர், மேட்டூர் மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணன், 54. இவர் நேற்று மதியம், கொளத்துார், காவேரிபுரம் ஊராட்சி கிழக்கு காவேரிபுரத்தில், நில ஆக்கிரமிப்பை அகற்ற, வருவாய் அலுவலர்களுடன் சென்றார்.
அப்போது, அங்கு வசிக்கும் பழனியம்மாள் தடுத்து, அரசு ஊழியர்களை திட்டி பணிபுரிய விடாமல் தடுத்தார். இதுகுறித்து கிருஷ்ணன் புகார்படி, கொளத்துார் போலீசார், பழனியம்மாள் மீது வழக்குப்பதிந்து
விசாரிக்கின்றனர்.