/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பெண்ணிடம் நில மோசடி விவசாயி மீது வழக்கு பெண்ணிடம் நில மோசடி விவசாயி மீது வழக்கு
பெண்ணிடம் நில மோசடி விவசாயி மீது வழக்கு
பெண்ணிடம் நில மோசடி விவசாயி மீது வழக்கு
பெண்ணிடம் நில மோசடி விவசாயி மீது வழக்கு
ADDED : ஜூன் 27, 2025 01:24 AM
மேட்டூர், கொளத்துார், கருங்கல்லுார், காந்தி நகரை சேர்ந்த, பதிரன் மனைவி தனம், 40. இவர், கொளத்துார் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று அளித்த புகார் மனு:
உக்கம்பருத்திகாட்டை சேர்ந்த விவசாயி சின்னசாமி, 45. சிங்கிரிப்பட்டியில் எனக்கு சொந்தமான, 6,013 சதுரடி நிலத்தை, 2019ல் சின்னசாமி பெயருக்கு மாற்றி கிரயம் செய்து, அவரிடம் இருந்து, 4.50 லட்சம் ரூபாய் வாங்கினேன்.
பணத்தை திருப்பித்தரும்போது நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்து கொண்டோம். அதன்படி பணத்தை, சின்னசாமியிடம் கொடுத்து, என் பெயருக்கு பத்திரத்தை மாற்றி எழுதி தரும்படி கேட்டேன். ஆனால் சின்னசாமி அந்த நிலத்தை வேறு ஒருவர் பெயருக்கு விற்றுள்ளது தெரியவந்தது. அதனால் சின்னசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.