/உள்ளூர் செய்திகள்/சேலம்/ துாய்மை பணியாளருக்கு தொல்லை ஒப்பந்ததாரர் உள்பட 2 பேர் மீது வழக்கு துாய்மை பணியாளருக்கு தொல்லை ஒப்பந்ததாரர் உள்பட 2 பேர் மீது வழக்கு
துாய்மை பணியாளருக்கு தொல்லை ஒப்பந்ததாரர் உள்பட 2 பேர் மீது வழக்கு
துாய்மை பணியாளருக்கு தொல்லை ஒப்பந்ததாரர் உள்பட 2 பேர் மீது வழக்கு
துாய்மை பணியாளருக்கு தொல்லை ஒப்பந்ததாரர் உள்பட 2 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 03, 2025 01:20 AM
சேலம், துாய்மை பணியாளருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த, 43 வயது பெண், புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, கார் ேஷாரூமில் துாய்மை பணியாளராக இருந்துள்ளார்.
அங்கிருந்த சக துாய்மை பணியாளர் அரவிந்த் என்பவர், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, அந்நிறுவனத்துக்கான துாய்மை பணி ஒப்பந்ததாரர் மகேஷ் என்பவரிடம் தெரிவித்தார். ஆனால், அவர் கண்டு கொள்ளாமல், அனுசரித்து செல்லும்படி தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அப்பெண், பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
தொல்லை கொடுத்த அரவிந்த் மற்றும் ஒப்பந்ததாரரான ஈரோட்டை சேர்ந்த மகேஷ் ஆகிய இருவர் மீதும், போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.