/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'ரபி' பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு 'ரபி' பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு
'ரபி' பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு
'ரபி' பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு
'ரபி' பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு
ADDED : செப் 24, 2025 01:32 AM
சேலம் :சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:'ரபி' பருவத்தில் நெல், பருத்தி, மக்காச்சோளம், தட்டைப்பயறு, நிலக்கடலை, சோளம் ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்படும்.
இதில் பருத்தி, மக்காச்சோளத்துக்கு, அக்., 31, நெல்லுக்கு நவ., 15, தட்டைப்பயறுக்கு நவ., 30, சோளத்துக்கு டிச., 16, நிலக்கடலைக்கு டிச., 30 வரை, காப்பீடு செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் அருகே உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகள், பொது சேவை மையங்களில், நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, பயிர் சாகுபடி அடங்கல் ஆகியவற்றின் நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் நெல் ஏக்கருக்கு, 568 ரூபாய், மக்காச்சோளத்துக்கு, 482, பருத்திக்கு, 680, நிலக்கடலைக்கு, 326, சோளத்துக்கு, 150, தட்டைப்பயறுக்கு, 252 ரூபாய் பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து
பயன்பெறலாம்.