/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நேர பலகை மறைப்பு பஸ் பயணியர் தடுமாற்றம் நேர பலகை மறைப்பு பஸ் பயணியர் தடுமாற்றம்
நேர பலகை மறைப்பு பஸ் பயணியர் தடுமாற்றம்
நேர பலகை மறைப்பு பஸ் பயணியர் தடுமாற்றம்
நேர பலகை மறைப்பு பஸ் பயணியர் தடுமாற்றம்
ADDED : செப் 15, 2025 01:04 AM
பனமரத்துப்பட்டி:சேலம் புதிய, பழைய பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து பனமரத்துப்பட்டி வழியே கம்மாளப்பட்டி, மங்களபுரம், ராசிபுரம், வாழப்பாடி, தம்மம்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கு, 12க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதனால் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில், பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டையில், பஸ்கள் வந்து செல்லும் கால அட்டவணை பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த அட்டவணையை மறைத்து, அரசு அனுமதியின்றி பேனர் வைத்துள்ளனர்.
இதனால் பஸ்கள் வந்து செல்லும் நேரத்தை தெரிந்துகொள்ள முடியாமல், உள்ளுர், வெளியூர் பயணியர் அவதிப்படுகின்றனர்.பேனரை அகற்ற, போலீசார், டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.