/உள்ளூர் செய்திகள்/சேலம்/புதுமாப்பிள்ளை கொடூர கொலை: ஊட்டியில் தம்பதி சுற்றிவளைப்புபுதுமாப்பிள்ளை கொடூர கொலை: ஊட்டியில் தம்பதி சுற்றிவளைப்பு
புதுமாப்பிள்ளை கொடூர கொலை: ஊட்டியில் தம்பதி சுற்றிவளைப்பு
புதுமாப்பிள்ளை கொடூர கொலை: ஊட்டியில் தம்பதி சுற்றிவளைப்பு
புதுமாப்பிள்ளை கொடூர கொலை: ஊட்டியில் தம்பதி சுற்றிவளைப்பு
ADDED : ஜன 11, 2024 10:59 AM
சேலம்: திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த ஆலந்துடையான்பட்டியை சேர்ந்த நடராஜ் மகன் தியாகு, 26. கட்டட தொழிலாளி. இவருக்கு, 4 மாதங்களுக்கு முன் திருமணமானது. சமீபத்தில் சேலம், ஜாகீர்காமநாயக்கன்பட்டி, பூனைக்கரட்டை சேர்ந்த அய்யம்பெருமாள், 51, வீட்டில் வாடகைக்கு குடியேறினார்.
கடந்த, 3 இரவு, வீட்டின் மொட்டை மாடியில் மது அருந்தியவர், மறுநாள் கழுத்து மற்றும் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். சூரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றினர்.
இதையடுத்து, அங்கு தொழிலாளியை வாடகைக்கு அமர்த்திய பாலகிருஷ்ணன், வரலட்சுமி ஜோடி தலைமறைவாக, போலீசார் தேடினர். அதே நேரம் கொலையில் தொடர்புடைய சுரேஷ், துறையூரில் பதுங்கி இருப்பது கண்டுபிடித்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரது வாக்குமூலப்படி ஊட்டி மலையடிவாரம், வெள்ளியங்காடு காரமடையில் இருந்த பாலகிருஷ்ணன், 27, அவரது மனைவி வரலட்சுமி, 20, ஆகியோரை, நேற்று காலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.