/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தானாக டிராக்டர் நகர்ந்ததில் சிறுவன் கால்கள் நசுங்கின தானாக டிராக்டர் நகர்ந்ததில் சிறுவன் கால்கள் நசுங்கின
தானாக டிராக்டர் நகர்ந்ததில் சிறுவன் கால்கள் நசுங்கின
தானாக டிராக்டர் நகர்ந்ததில் சிறுவன் கால்கள் நசுங்கின
தானாக டிராக்டர் நகர்ந்ததில் சிறுவன் கால்கள் நசுங்கின
ADDED : மே 10, 2025 02:00 AM
காரிப்பட்டி, காரிப்பட்டி அருகே அனுப்பூர், சிவகங்கைபுரத்தை சேர்ந்த, விவசாயி ஞானமுருகன். வீடு அருகே டிராக்டரை நிறுத்தியிருந்தார். இவரது மகன் சர்வீன், 15, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளான்.
நேற்று முன்தினம் மாலை டிராக்டர் அருகே சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது, டிராக்டர் தானாக பின்நோக்கி வந்து, சிறுவன் மீது மோதியது.
இதில் சக்கரம் ஏறி, சிறுவனின் இரு கால்களும் நசுங்கின. உடனே அவனை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். பின் மேல் சிகிச்சைக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.