/உள்ளூர் செய்திகள்/சேலம்/அரசு மருத்துவமனையில் பைக் திருடியவர் கைதுஅரசு மருத்துவமனையில் பைக் திருடியவர் கைது
அரசு மருத்துவமனையில் பைக் திருடியவர் கைது
அரசு மருத்துவமனையில் பைக் திருடியவர் கைது
அரசு மருத்துவமனையில் பைக் திருடியவர் கைது
ADDED : ஜூலை 16, 2024 02:04 AM
சேலம்: சேலம் அரசு மருத்துவமனை யில், பைக் திருடிய நபரை கைது செய்து அவரிடம் இருந்து, ஐந்து பைக்குகள் பறிமுதல் செய்யப்-பட்டன.
சேலம் அரசு மருத்துவமனையில், அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடப்படுகிறது. காரிப்பட்டியை சேர்ந்த திவாகரன், 36, என்பவர் மருத்துவமனையில் வார்டு மேலாளராக பணிபுரி-கிறார். கடந்த மாதம், 22ம் தேதி காலை, 10:00 மணிக்கு பைக்கை நிறுத்தி விட்டு பணிக்கு சென்றார். மாலை, 5:00 மணிக்கு பார்த்த-போது பைக் திருட்டு போனது தெரிய வந்தது. இதையடுத்து, மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், பைக்கை திருடி சென்றது திருப்பூர் பெரியபாளையம், ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த வேணுகோபால், 57, என்பது தெரியவந்தது. மேலும் பழைய பஸ் ஸ்டாண்ட், அன்னதானப்பட்டி உட்பட பல பகுதிகளில் நான்கு பைக்குகள் திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. அவரை கைது செய்து ஐந்து பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.