ADDED : ஜூன் 21, 2024 07:27 AM
சேலம் : சேலம் மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் அஸ்தம்பட்டியில் உள்ள நீதிமன்ற வளாகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். அதில் இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றின் பெயர், ஷரத்துகளை மாற்றும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். செயலர் நரேஷ்பாபு, பொருளாளர் அசோக்குமார், துணைத்தலைவர் சுகவனேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.அதே கோரிக்கையை வலியுறுத்தி ஆத்துார் நீதிமன்ற வளாகம் முன், ஆத்துார் வக்கீல் சங்க தலைவர் சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலர் மோகன்குமார் உள்பட பலர் பங்கேற்றார்.ஓமலுார் வக்கீல்கள் ஓமலுாரில், வக்கீல் சங்கத்தலைவர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இணை செயலர் ராம்பிரகாஷ், முன்னாள் தலைவர் சிவராமன் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து வக்கீல்கள் நீதிமன்ற பணியை புறக்கணித்தனர்.