/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி டீனுக்கு விருது விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி டீனுக்கு விருது
விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி டீனுக்கு விருது
விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி டீனுக்கு விருது
விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி டீனுக்கு விருது
ADDED : ஜூன் 25, 2025 01:39 AM
சேலம், தமிழக முன்னணி செய்தி தொடர்பு ஊடகம், ஆண்டுதோறும் தொழிற்சார்ந்த பல்வேறு பிரிவுகளில் புதுமையை புகுத்தி, உலக அளவில் செயல்படுத்தும் தொழில் முனைவோர், நிறுவனத்தினர், சிறந்த பங்களிப்பாளர், தொழில் ஆளுமைகளை அடையாளம் கண்டு விருது வழங்கி அங்கீகரித்து வருகிறது.
அதன்படி நடப்பாண்டு விருது வழங்கும் விழா, 'தொழில் ஆளுமை விருதுகள்' தலைப்பில், கோவையில் நடந்தது. தமிழ் வளர்ச்சி, தகவல், விளம்பர துறை அமைச்சர் சாமிநாதன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதில் விநாயகா மிஷன் பல்கலைக்குட்பட்ட, அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிகளின் டீன் செந்தில்குமாருக்கு, கல்வி பிரிவில் அவரது, 25 ஆண்டு சேவை, சுகாதார கல்வி பிரிவில் அவரது தொலைநோக்கு பார்வை, தலைமைத்துவம், புதுமை சார்ந்த பங்களிப்பு ஆகியவற்றை மையமாக வைத்து, தமிழகத்தில் சுகாதார கல்வி சேவையை மேம்படுத்தியதற்கு, 'சாம்பியனிங் ஹெல்த் எஜூகேசன் இன் தமிழ்நாடு' விருது வழங்கப்பட்டது.
இதனால் டீனை, பல்கலை வேந்தர் கணேசன், துணைத்தலைவர் அனுராதா, கல்லுாரி பேராசிரியர்கள் பாராட்டினர்.