/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலம் வராகி அம்மன் கோவிலில் 'ஆஷாட' நவராத்திரி விழா பூஜை சேலம் வராகி அம்மன் கோவிலில் 'ஆஷாட' நவராத்திரி விழா பூஜை
சேலம் வராகி அம்மன் கோவிலில் 'ஆஷாட' நவராத்திரி விழா பூஜை
சேலம் வராகி அம்மன் கோவிலில் 'ஆஷாட' நவராத்திரி விழா பூஜை
சேலம் வராகி அம்மன் கோவிலில் 'ஆஷாட' நவராத்திரி விழா பூஜை
ADDED : ஜூன் 30, 2025 03:30 AM
சேலம்: வராகி அம்மன் கோவிலில் நடந்து வரும் 'ஆஷாட' நவராத்திரி விழாவையொட்டி, தினசரி விதவிதமான அலங்காரங்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
சேலம் தளவாய்ப்பட்டி இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே, மகா ருத்ர வராகி அம்மன் கோவிலில் கடந்த, 25ம் தேதி அமாவா-சையன்று மகா கணபதி, மகா ருத்ர வராகி, மகா கால பைரவருக்கு சிறப்பு யாக பூஜைகள் செய்து 'ஆஷாட' நவராத்திரி விழா துவங்கி-யது. ஜூலை 5 வரை 10 நாட்கள் நடக்கும் நவராத்திரி விழாவை-யொட்டி, தினசரி மூலவர் வராகி அம்மனுக்கு அபி ேஷகம், அலங்கார பூஜை, சகஸ்ர நாம பாராயணத்துடன் நடந்து வருகிறது. பஞ்சமியான இன்று (ஜூன் 30) காலை 6:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், மாலை 6:00 மணிக்கு பஞ்சமி பூஜை நடக்கவுள்-ளது.ஜூலை 4ம் தேதி காலை 8:00 மணிக்கு பால்குட ஊர்வலம், மாலை கோவை சரவணம்பட்டி குருகிருபா நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம், இரவு அம்மன் திருவீதி உலா, ஆகியவை நடக்கிறது. 5 காலை, 10:30 மணிக்கு மகா ருத்ர வராகி அம்மன் உடனமர் உன்மத்த கால பைரவர் திருக்கல்-யாணம் மற்றும் பட்டாபி ேஷகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் 'ஆஷாட' நவராத்திரி விழா நிறைவு பெறும்.