ADDED : செப் 13, 2025 01:20 AM
சேலம், சேலம் மாவட்ட கலை பண்பாடுத்துறை சார்பில், மக்களிடம் கலைஞர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, கலை விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியில், நாட்டுப்புற கலைப்பயிற்சி, கலைக்குழுக்கள் பதிவு, நாட்டுப்புற கலைஞர்களின் நலவாரியம், மாவட்ட கலை மன்றம் போன்றவை குறித்து, கலைஞர்கள், மக்கள் அறிந்து கொள்ள, விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, ஏராளமான கலைஞர்கள் புறப்பட்டனர். திருவள்ளுவர் சிலை வழியே சென்று, ராஜகணபதி கோவில் பகுதியை அடைந்தனர்.
மேலும் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம், நாட்டுப்புற கலைஞர் சங்கம், நாதஸ்வரம், தவில், இசைக்கலைஞர் சங்கம், தமிழ் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள், உரிய பாணியில் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றியபடி, பேரணியில் அணிவகுத்தனர். உதவி இயக்குனர் சங்கரராமன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.