/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இன்று முதல் குழந்தைகளுக்கு 'ஏ' திரவம் வழங்க ஏற்பாடு இன்று முதல் குழந்தைகளுக்கு 'ஏ' திரவம் வழங்க ஏற்பாடு
இன்று முதல் குழந்தைகளுக்கு 'ஏ' திரவம் வழங்க ஏற்பாடு
இன்று முதல் குழந்தைகளுக்கு 'ஏ' திரவம் வழங்க ஏற்பாடு
இன்று முதல் குழந்தைகளுக்கு 'ஏ' திரவம் வழங்க ஏற்பாடு
ADDED : மார் 17, 2025 03:50 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் இன்று முதல், 19ம் தேதி தவிர்த்து, வரும், 22 வரை, 2,62,674 குழந்தைகளுக்கு, 'வைட்டமின் ஏ' திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுதும் உள்ள ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்-படும். 6 மாதம் முதல், 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மருந்து விடலாம். பொது சுகாதாரம், ஒருங்கிணைந்த குழந்-தைகள் வளர்ச்சித்திட்ட துறைகளை சேர்ந்த, 3,118 பணியா-ளர்கள், சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.அப்பணியை, 459 பணியாளர்கள் மேற்பார்வையிடுகின்றனர். தாய்மார்கள், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளித்து, பார்வை குறைபாடு இல்லாத இளைய சமுதாயம் உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்-டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.