/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கிணற்று சுவரில் அமர்ந்து பேசிய முதியவர் தவறி விழுந்து பலி கிணற்று சுவரில் அமர்ந்து பேசிய முதியவர் தவறி விழுந்து பலி
கிணற்று சுவரில் அமர்ந்து பேசிய முதியவர் தவறி விழுந்து பலி
கிணற்று சுவரில் அமர்ந்து பேசிய முதியவர் தவறி விழுந்து பலி
கிணற்று சுவரில் அமர்ந்து பேசிய முதியவர் தவறி விழுந்து பலி
ADDED : ஜூன் 26, 2025 01:59 AM
கெங்கவல்லி, தலைவாசல் அருகே பெரிய புனல்வாசலை சேர்ந்தவர் கண்ணுசாமி, 65. கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள பொதுக்கிணற்றின் சுவர் மீது அமர்ந்து, சிலருடன் பேசிக்கொண்டிருந்தார்.
10:30 மணிக்கு, அவர் கிணற்றில் பின்புறமாக தவறி விழுந்தார். 10 நிமிடத்தில், கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. 11:00 மணிக்கு அங்கு வந்த வீரர்கள், 100 அடி ஆழத்தில், 80 அடிக்கு தண்ணீர் உள்ள கிணற்றில் இறங்கி தேடினர். ஒன்றரை மணி நேரத்துக்கு பின், கண்ணுசாமியை சடலமாக மீட்டனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.