/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முகூர்த்த நாளை முன்னிட்டு விமான கட்டணம் விர்... முகூர்த்த நாளை முன்னிட்டு விமான கட்டணம் விர்...
முகூர்த்த நாளை முன்னிட்டு விமான கட்டணம் விர்...
முகூர்த்த நாளை முன்னிட்டு விமான கட்டணம் விர்...
முகூர்த்த நாளை முன்னிட்டு விமான கட்டணம் விர்...
ADDED : ஜூன் 08, 2025 01:09 AM
சேலம், இன்று முகூர்த்த நாளை முன்னிட்டு, சேலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் விமான டிக்கெட் கட்டணம், 3 மடங்கு உயர்த்தப்பட்டது.
சேலம் விமான நிலையத்தில் இருந்து, 'இண்டிகோ' நிறுவனம் சார்பில், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு விமானம் இயக்கப்படுகிறது. சாதாரண நாட்களில், அதன் கட்டணம், 3,000 முதல், 4,500 ரூபாய் வரை இருக்கும். இன்று முகூர்த்த நாளை முன்னிட்டு, பல்வேறு ஊர்களுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை, நேற்று பல மடங்கு அதிகரித்தது. சாலைகளில் கார்களின் ஊர்வலத்தால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
மேலும் விமான டிக்கெட் கட்டணம், 3 மடங்குக்கு மேலாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி சென்னைக்கு, 12,613, பெங்களூருக்கு, 8,048, ஹைதராபாத்துக்கு, 12,059, கொச்சிக்கு, 12,261 ரூபாய் என, உயர்த்தப்பட்டிருந்தது. இருப்பினும் டிக்கெட்டுகள் விற்று, கூட்டமாக காணப்பட்டது.