/உள்ளூர் செய்திகள்/சேலம்/ துண்டு பிரசுரம் வழங்கி அ.தி.மு.க., பிரசாரம் துண்டு பிரசுரம் வழங்கி அ.தி.மு.க., பிரசாரம்
துண்டு பிரசுரம் வழங்கி அ.தி.மு.க., பிரசாரம்
துண்டு பிரசுரம் வழங்கி அ.தி.மு.க., பிரசாரம்
துண்டு பிரசுரம் வழங்கி அ.தி.மு.க., பிரசாரம்
ADDED : ஜூன் 09, 2025 04:35 AM
சேலம்: தி.மு.க., ஆட்சியின் அவலங்கள் குறித்து, மக்கள் இடையே திண்ணை பிரசாரத்தில் ஈடுபட, அ.தி.மு.க., தலைமை அறிவுறுத்-தியதால், சேலம் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், அதன் செயலர் குமரகுரு முன்னிலையில், அமைப்பு செயலர் சிங்-காரம், சேலம் காந்தி மைதானத்தில் நேற்று, நடைபயிற்சிக்கு வந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
அதில், 'தி.மு.க., ஆட்சியில் தினமும் நடக்கும் கொலை, கொள்ளை, பலாத்காரம், விலைவாசி, வரி உயர்வு, மின் கட்-டணம், பால் விலை உயர்வு உள்ளிட்ட, மக்களை பாதிக்கும் அவ-லங்களை பட்டியலிட்டிருந்தனர்.
மேலும், அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் அச்சடிக்கப்பட்டி-ருந்தன.
இந்நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் செல்-வராஜ், பாலு, அவைத்தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.